Skip to main content

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உறுதியாக நடைபெறும் - அமைச்சர் செங்கோட்டையன்

Published on 08/05/2020 | Edited on 08/05/2020

 

   Minister sengottaiyan about sslc exams-to-be announced after june last week

 

உலகத்தை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து, 10-ம் பொதுத்தேர்வுகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுமா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.


இந்நிலையில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் உறுதியாக நடைபெறும். உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு பின் ஜூன் மாத இறுதிக்குப் பிறகு பொதுத் தேர்வு கால அட்டவணையை அறிவிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக" தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 

 

   Minister sengottaiyan about sslc exams-to-be announced after june last week



சற்று முன்னர் சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு தேர்வுகள் ஜூலை 1-ந் தேதி முதல் ஜூலை 15-ந் தேதிக்குள் நடத்தப்படும் என்று மத்திய் அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 
 
 

சார்ந்த செய்திகள்