Published on 11/12/2021 | Edited on 11/12/2021

திருச்சி மின்பகிர்மான பெருநகர வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சி கிளை கோட்டம், பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட அரியமங்கலம், காட்டூர், திருவரம்பூர், நவல்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறைந்த மின் அழுத்தத்தை நீக்கும் பொருட்டு ஒரு கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய டிரான்ஸ்ஃபார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 9 மற்றும் 10ஆம் தேதிகளில் மொத்தம் 37 இடங்களில் புதிதாக இந்த டிரான்ஸ்ஃபார்மர்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தப் புதிய டிரான்ஸ்ஃபார்மர்களை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இயக்கிவைத்தார்.