சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் 233வது ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள சின்னமலை சிலைக்கு முதல்வர் பழனிச்சாமி உட்பட அமைச்சர்கள் பலர் மாலை யணிவித்தனர் அதே போல் எதிர்கட்சி தலைவரும் தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் சு.முத்துச்சாமி உட்பட தி.மு.க. நிர்வாகிகளும் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
சின்னமலை பிறந்த ஊர் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே உள்ள ஓடாநிலை கிராமம் இங்கு சின்னமலைக்கு மணி மண்டபம் உள்ளது. அ.தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி என பத்து அமைச்சர்களும் தி.மு.க. மாநில நெசவாளர் அணி தலைவர் சச்சிதானந்தம் தலைமையில் நிர்வாகிகளும் அம்மா முன்னேற்ற கழகத்தின் சார்பில் டி.டி.வி.தினகரன் மற்றும் காங்கிரஸ், பா.ம.க. , பா.ஜ.க. ம.தி.மு.க. கொ.ம.தே.க. ஈஸ்வரன், கொங்கு இளைஞர் பேரவை எம்.எல்.ஏ உ.தனியரசு என அரசியல் கட்சியினர் பல்வேறு அமைப்பினர் நேரில் வந்து தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்தினார்கள். இதேபோல் சின்னமலை ஆங்கிலேயர்களால் தூக்கிலடப்பட்ட சங்ககிரி கோட்டைக்கும் சென்று பலர் மலர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.