மேலவளவு குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை திரும்பப் பெற வேண்டியும், குற்றவாளிகளை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமையில் மதுரையில் ஆர்ப்பாட்டம், மறியல் நடைபெற்றது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற மேலவளவு ஊராட்சித் தலைவர் முருகேசன் படுகொலையில் தண்டனை பெற்றவர்கள் 13 பேரை தமிழக அரசு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் போது நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை செய்தனர்.
இந்நிலையில் விடுதலை செய்ததை எதிர்த்து மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்பை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் உரிய நீதி வழங்கிட வேண்டும், மேலவளவு குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதை திரும்பப் பெற வேண்டும், குற்றவாளிகளை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தை காவல்துறையினர் தடுக்க முயன்ற போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் மதுரை அண்ணாபேருந்து நிலையம் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பதிப்பு ஏற்பட்டது. மேலும் போராட்டகாரர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர்.