இந்தியாவிலேயே தேர்தலின்போது பண விநியோகம் செய்து தேர்தலை நிறுத்திய பெருமை கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அரவக்குறிச்சி தொகுதிக்கு உண்டு. அதேபோல தற்போது அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக, கரூர் எம்.பி தொகுதியும், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியும் மாறியுள்ளது.
கரூர் எம்.பி. தொகுதி, கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், வேடசந்தூர், மணப்பாறை, விராலிமலை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. கரூர் எம்.பி. தொகுதியில் மொத்தம் 1650 வாக்குசாவடிகள் உள்ளன. ஆண் வாக்காளர்கள் 6,69,115, பெண் வாக்காளர்கள் 6,96,623 இதர வாக்காளர்கள் 64 மொத்தம் 13,65,802 பேர். களத்தில் 42 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் 63 பேர் போட்டியிடுகிறார்கள்.
இதனால் நோட்டாவையும் சேர்த்து வாக்கு இயந்திரத்தில் 43 பட்டன்கள் இடம் பெற்று இருந்தது. தமிழகத்திலேயே கரூர் எம்.பி. தொகுதியில் தான் அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
அதே போன்று இடைத்தேர்தல்கள் நடைபெறும் 4 தொகுதிகளில் அரவக்குறிச்சி தொகுதியில்தான் அதிக வேட்பாளர்கள். அதாவது 63 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். திமுக, அதிமுக, நோட்டா உள்ளிட்ட மற்ற சுயேச்சை வேட்பாளர்களையும் சேர்த்து மொத்தம் 64 பட்டன்கள் இடம் பெற்றிருக்கும். அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 250 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குசாவடியிலும் 4 மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளன. ஆக 4 வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அதில் ஒவ்வொரு வாக்காளரும் தான் ஓட்டு போட நினைக்கும் வாக்காளரை தேடித்தான் போட வேண்டியிருக்கும்.