
சென்னையில் 'சீர்மிகு நகரம்' திட்டத்தின் கீழ் 50 இடங்களை தேர்வு செய்து அதில் தற்பொழுது 46 இடங்களில் WI-FI ஸ்மார்ட் கம்பங்கள் நடப்பட்டுள்ளது .சென்னை மெரினா கடற்கரை, அசோக்பில்லர், நடேசன் பூங்கா, தி.நகர் உள்ளிட்ட 46 இடங்களில் WI-FI கம்பங்கள் நடப்பட்டுள்ளது. நடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் கம்பங்கள் மூலம் 30 நிமிடங்களுக்கு இலவச WI-FI தொடர்பை மக்கள் பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
WI-FI வசதியைப் பெறுவதற்கு மொபைல் எண்ணைப் பதிவு செய்து ஒடிபி மூலம் இந்த சேவையைப் பெற்றுக்கொள்ளலலாம். ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகள் குறித்து சென்னை மாநகராட்சி இணையதளத்தில் தகவல் தெரிந்துகொள்ளலாம். WI-FI வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் கம்பங்களில் கூடுதல் வசதிகளும் இடம்பற்றுள்ளது. பேரிடர் காலங்களில் நடக்கும் விபத்துகளைக் கண்டறிந்து தகவல் தெரிவிக்கும் வசதி உள்ளது. அதேபோல் மழைக்காலங்களில் மழைபெய்யும் அளவைத் தெரிந்துகொள்ளலாம். வெள்ளப்பெருக்கின் பொழுது குறிப்பிட்ட பகுதியில் தேங்கும் நீரின் அளவையும் தெரிந்துகொள்ளலாம்.