கரோனா வைரஸ் உலக முழுவதிலும் பொதுமக்களை பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கையில் சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கவில்லை என்றும், மருத்துவர்கள் முதல் செவிலியர்கள் வரை அனைவரும் கடுமையான மனசோர்வில் இருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் டிஎம்எஸ் கட்டுபாட்டின் கீழ் இருக்கும் 14 மருத்துவமனைகளில் தோராயமாக 1500க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்கள் (மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் சேர்த்து) பணிபுரிந்து வருகிறன்றனர்.
![Mask](http://image.nakkheeran.in/cdn/farfuture/CewDiUXD4SbKgILIqgMhVZ90TQypFxhq7wA33Emg19o/1584979266/sites/default/files/inline-images/q2323.jpg)
இவர்களுக்கு தற்பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் அரசால் வழங்கபடவில்லை. குறைந்த பட்ச பாதுகாப்பு முகக்கவசம் 500 தான் வழங்கப்பட்டுள்ளதாம். அதுவும் டிஸ்போசபல் மாஸ்க் வழங்கபட்டுள்ளதாம்.
அதுவும் இந்த மாஸ்க்கை 4 மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்பது உலக சுகாதர நிறுவனத்தின் கட்டுபாடு. தமிழக மருத்துவ ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் மாஸ்க்காவது போதுமான அளவு கிடைக்காமல் இருப்பது மருத்துவ ஊழியர்களின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவமனை ஊழியர்கள் கைக்கழுவுவதற்கு தேவையான வாஷ் பேசின்கள், ஏன் தண்ணீர் கூட இல்லாமல் இருக்கிறது. அரசு உடனடியாக மருத்துவ ஊழியர்களுக்கு தேவையான அடிப்படை உபகரணங்கள் உள்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறுகின்றனர்.