Skip to main content

கரூரில் ரயில் மோதி ஒருவர் பலி

Published on 02/11/2022 | Edited on 02/11/2022

 

man passed away after being hit by train crossing tracks

 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ரயில்வே தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதி கீழவதியத்தைச் சேர்ந்த ஜெய்கணேஷ் என்பவர் உடல் சிதறி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

 

திருச்சியிலிருந்து கரூர் வரை செல்லும் ரயில்வே தண்டவாளத்தைக் கடக்கும் பொழுது, அவ்வழியாகச் சென்ற ரயில் மோதியதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

சம்பவம் குறித்து கரூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில் விரைந்து வந்த அவர்கள், ஜெய்கணேஷ் உடல் பாகங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த ஜெய்கணேஷ்க்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்