குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் டிஜிபி டிகே.ராஜேந்திரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
குட்கா வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை இரண்டு அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. முன்னாள் டிஜிபி டிகே.ராஜேந்திரன் மற்றும் கூடுதல் ஆணையர் தினகரன் ஆகியோர் இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இரண்டாம் தேதி டிகே.ராஜேந்திரனும். மூன்றாம் தேதி தினகரனும் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் உரிமையாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் 246 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் தற்போது இந்த சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குட்கா முறைகேடு வழக்கில் சிபிஐ தரப்பில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குட்கா விற்பனை மூலம் 639 கோடிக்கு சட்டவிரோத பணபரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.