புளுவேல் விளையாட்டை தடை செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
புளுவேல் விளையாட்டால் இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டது குறித்து மதுரை ஜகோர்ட் தானாக முன்வந்து வழக்கு (சூ-மோட்டோ) வழக்கு பதிவு செய்தது. இந்த விளையாட்டை ஷேர் இட், பேஸ்புக் மூலம் பகிர்ந்து கொள்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் இனிமேலும் இந்த விளையாட்டால் பாதிப்புகள் ஏற்படாத வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் இது சம்பந்தமாக அனுபவம் வாய்ந்த காவல் துறையைச் சேர்ந்த தலைமை உயர் அதிகாரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் இந்த விளையாட்டை முற்றிலும் தடை செய்ய மத்திய - மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இந்த விளையாட்டின் விபரீதம் குறித்து பள்ளி, உயர் கல்வித்துறை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
-முகில்