மதுரை பள்ளியில் தாத்தா, பாட்டிகளுக்கு கவுரவ விழா
மதுரை மாவட்டம் சி,இ, ஓ, ஏ பள்ளியில் தாத்தா, பாட்டியினை கவுரவிக்கும் வகையில் ஏராளமான நிகழ்ச்சிகள் மிக விமர்சியாக நடைபெற்றன.
மதுரை மாவட்டம் கோச குளத்தில் அமைந்துள்ள தென் தமிழகத்தில் மெட்ரிக் பள்ளியில் தலை சிறந்து விளங்கும் சி,இ, ஓ,ஏ மெட்ரிக் மேன் நிலை பள்ளியில் இன்று தாத்தா பாட்டியினை கௌரவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன . இதில் சின்னஞ் சிறு குழந்தைகள் முதியவர்கள் போல் வேடமிட்டும் அவர்கள் படும் கஷ்டதினையும் , துன்பதினையும் நாடக வடிவில் செய்து காட்டி அனைவரின் மனதை கவர்ந்தன . மேலும் தாத்தா பாட்டிகளுக்கு விழையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு அவர்களுக்கு பரிசுகளும் வழங்கி கெளரவிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சி சி,இ,ஓ,ஏ மெட்ரிக் மேன் நிலை பள்ளி நிறுவனர் இராஜா கிளைமாஜீ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய பொருள், சேவை வரி கண்காணிப்பாளர் S.தமிழ்மணி அவர்கள் வரவழைக்கபட்டார் மேலும் இந்நிகழ்சியில் பள்ளி செயல் தலைவர் சாமி , துணை தலைவர் அசோக் ராஜ் , விக்டர் தன்ராஜ் , பாக்கியநாதன் செயலாளர் செளந்திர பாண்டியன் , பொருளாளர் பிரகாஷ் பள்ளி முதல் ஹேமா தலைமை ஆசிரியர்கள் சொர்ணலதா , நர்ஸிம் பானு மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் அனைத்து மாணவ மணவிகளின் தாத்தா பாட்டி பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-முகில்