மதுரை கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை அருகே இன்று காலை பழமையான கட்டடம் ஒன்று இடந்து விழுந்ததில் தலைமை காவலர் சரவணன் என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக விசாரணை செய்த காவல்துறையினர், இடிந்த கட்டடத்தை ஓராண்டுக்கு முன்பே இடிக்க மாநகராட்சி சார்பில் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
ஆனால் உரிமையாளர்கள் கட்டடத்தை இடிக்காமல் தற்போது வரை விதிமுறையை மீறி பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக கட்டட உரிமையாளர் முகமது இத்ரீஸ், மேலாளர் அப்துல் ரசாக், கடை உரிமையாளர் நாக சங்கர், சுப்பிரமணி உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விபத்தில் உயிரிழந்த காவலர் சரவணன் குடும்பத்துக்கு 25 லட்சம் நிதியுதவியைத் தமிழக அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.