Skip to main content

ஒரு மாதத்திற்கு பிறகு குறைந்த பெட்ரோல் விலை!

Published on 22/08/2021 | Edited on 22/08/2021

 

Low petrol price after a month!

 

சென்னையில் 8 நாட்களுக்கு பிறகு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 15 காசுகள் குறைந்துள்ளது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 99.32 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு லிட்டர் டீசல் விலையும் 18 காசுகள் குறைந்துள்ளது. ஒரு லிட்டர் டீசல் 93.66 ரூபாய்க்கு  விற்பனையாகிறது.

 

சென்னையில் சுமார் ஒரு மாதத்துக்கு பிறகு பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்த போது சுமார் ஒரு மாதகாலம் பெட்ரோல் விலை குறையாமல் இருந்த நிலையில், இன்று குறைந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கலின்போது பெட்ரோல் மீதான வரி 3 ரூபாய் குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார். இந்நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100க்கும் கீழ் இறங்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்