Published on 06/10/2018 | Edited on 06/10/2018
பல்கலைக்கழக துணைவேந்தர் பணி நியமனத்தில் பல கோடிகள் புரண்டதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உயர்கல்வி மேம்பாடு குறித்து நடந்த கருத்தரங்கில் பேசிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துணைவேந்தர் பணி நியமனத்தில் பல கோடிகள் புரண்டதாக தெரிவித்துள்ளார்.
துணை வேந்தர் பணி நியமனம் தகுதி அடிப்படையிலேயே நடக்க வேண்டும் ஆனால் இப்படி பல கோடிகள் வாங்கிக்கொண்டு துணை வேந்தர்களை நியமித்தது கண்டு வருத்தமடைந்தேன். அந்த நிலையை மாற்ற வேண்டும். இதுவரை தகுதி அடிப்படையில் 9 துணை வேந்தர்களை தான் நியமித்துள்ளேன் எனவும் கூறினார்.