Skip to main content

10 ஆண்டுகளுக்கு பிறகு புதுவையில் உள்ளாட்சித் தேர்தல்!

Published on 22/09/2021 | Edited on 22/09/2021

 

Local elections in Puthuvai after 10 years!

 

தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் விடுபட்ட மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. 

 

இந்நிலையில், அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில், இன்று (22.09.2021) பகல் 12 மணிக்கு உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை புதுவை தேர்தல் ஆணையர்  ராய் பி தாமஸ் அறிவிக்க இருக்கிறார். 5 நகராட்சிகள், 10 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்