Skip to main content

விவசாய சங்கத் தலைவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

 

FARMERS ASSOCIATION PRESIDENT POLICE

 

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே வீரனந்தபுரம் கிராமத்தில், சாலை விரிவாக்கத்திற்காக வீடுகளை கையகப்படுத்தியைத் தடுத்த காவிரி பாசன விவசாய சங்கத் தலைவர் இளங்கீரனை, கடந்த 11- ஆம் தேதி பொதுமக்கள் முன்னிலையில் காவல்துறையினர் தாக்கினர். மேலும், அவர் மீது பொய் வழக்குப் பதியப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர். இளைங்கீரனைத் தாக்கிய காவல்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் அனைத்துக் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

 

FARMERS ASSOCIATION PRESIDENT POLICE

 

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.சண்முகம், அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு மாநில அமைப்பாளர் பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விவசாய அணி பசுமை வளவன், மக்கள் அதிகாரம் ராஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகி சேகர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பிரகாஷ், விவசாய சங்க மாவட்டத் துணைத் தலைவர் கற்பனை செல்வம், இளங்கோவன் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் வெற்றிகுமார், வீராணம் ஏரி பாசன சங்கத் தலைவர் பாலு மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 200- க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு காட்டுமன்னார்குடி காவல் ஆய்வாளர் ராஜாவை கண்டித்துக் கோஷங்களை எழுப்பினர். 

 

மேலும், நெய்வேலி காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி சுப்பிரமணியன் மரணத்திற்கு முதல் விசாரணை குற்றவாளியாக உள்ள ஆய்வாளர் ராஜாவை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்