தர்மபுரி மாவட்டம் பாலகோடு வட்டம் கெண்டையனள்ளி ஊராட்சிக்கு தேர்தல் நடந்தது. இந்த ஊராட்சி தலைவர் பதவிக்கு எஸ்.சி. எஸ்.டி. பிரிவினர் போட்டியிடலாம் என ஒதுக்கப்பட்டது. குறவர் சமூகம் பி.சி. பட்டியலில் வரும் நிலையில், அந்த சமூகத்தைச் சேர்ந்த சகுந்தலா என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதுகுறித்து விசாரித்தபோது, “குறவர்” எனும் வரும் அந்த “ர்” என்பதை மட்டும் மாற்றி “ ன் “ என்று போட்டதின் விளைவால் சாதி பட்டியலில் மாறி “குறவன்” என்னும் சாதி எஸ்சி பட்டியலுக்கு மாற்றி தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளார் என்கிறார்கள் அவரை எதிர்த்து போட்டியிட்டவர்கள்.
2016ல் உள்ளாட்சி தேர்தல் வந்தபோது இதே போல தான் செய்துள்ளார் சகுந்தலா ராமசாமி. இதனை கண்டரிந்த மாதுராணி என்பவர், எஸ்.சி. எஸ்.டி. ஆணையத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், அதனை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ளது எஸ்சி எஸடி ஆணையம். ஆனால் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் இதற்கான எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல் மூன்று வருடங்கலாக அலைகழித்த நிலையில், தற்போது நடந்து முடிந்த தேர்தலிலும் அதே சாதி சான்றிதழை வைத்து தேர்தலில் வெற்றி பெற்று உள்ளாட்சி தலைவராக சகுந்தலா ராமசாமி வலம் வந்துகொண்டிருக்கிறார் என்கிறார்கள்.