நாகை மாவட்டம் சீர்காழி ஒன்றியத்தில் 21 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக 9 இடங்களிலும், அதிமுக 7 இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 5 இடங்களிலும் வெற்றிபெற்றனர். இதனையடுத்து சீர்காழி ஒன்றிய குழு தலைவர் பதவியை கைப்பற்ற 20வது வார்டில் வெற்றி பெற்ற திமுகவை சேர்ந்த மாநில பொதுக்குழு உறுப்பினரான மேலையூரை சேர்ந்த தேவேந்திரனின் மனைவி கமலாஜோதியும், பத்தொன்பதாம் வார்டில் வெற்றி பெற்ற திமுக மாவட்ட பொருளாளர் எஸ்,என்,ரவியின் மனைவி மதுமிதாவும், 1வது வார்டில் வெற்றிபெற்ற திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரனின் மனைவி உஷாநந்தினிக்கும் இடையே போட்டி இருந்துவந்தது.
![local body election-Nagapattinam-dmk](http://image.nakkheeran.in/cdn/farfuture/78Uf5X3Qp1SF6PO9paOfWNfFackHbCjsxA88YOmhRhU/1578745492/sites/default/files/inline-images/11111111111111111_1.jpg)
இந்தநிலையில், கமலஜோதியின் ஊர், திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்காவின் ஆசி அதிகமாகவே இருந்தது. கமலஜோதிக்கு துர்க்கா ஸ்டாலின் ஆதரவு தெரிவித்திருப்பதாக அதிருப்தியடைந்த மதுமிதாவின் ஆதரவாளர்கள், காவிரிப்பூம்பட்டினம் கிராமமக்கள் 300க்கும் அதிகமானோரோடு திரண்டுவந்து திருவெண்காட்டில் உள்ள துர்கா ஸ்டாலின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி, இது நம் கட்சி பிரச்சனை நாமே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும், இதை வீதிக்கு கொண்டு வந்தது தவறு என பேசி சமாதானப்படுத்திவிட்டு செம்பனார்கோயிலில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தநிலையில் சுயேட்சைகளின் ஆதரவு யாருக்கு என்றிருந்த நிலையில், இன்று நடந்த ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் கமலஜோதி சுயேச்சைகள் இருவரின் வாக்குகளை பெற்று பதினோரு வாக்குகளோடு வெற்றி பெற்றார். அதிமுக 10 வாக்குகளை பெற்று தோல்வியுற்றது. கமலஜோதி தலைவர் பொறுப்பு எற்றார்.