Published on 30/12/2019 | Edited on 30/12/2019
![Livestock Park salem district thalaivasal](http://image.nakkheeran.in/cdn/farfuture/P9g05M0nhsC5N-mFJ0yOng7oKsNc2oIhRvMP-OGM34E/1577715239/sites/default/files/inline-images/tn%20gvot_2.jpg)
சேலம் மாவட்டம் தலைவாசலில் நவீன கால்நடைப் பூங்கா அமைக்க ரூபாய் 564.44 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. தலைவாசலில் 900 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த நவீன கால்நடைப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. அதில் பண்ணை, உணவு பதப்படுத்துதல், கல்வி, ஆராய்ச்சி உள்ளிட்ட அம்சங்களுடன் பூங்கா அமைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.