திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சமீபகாலமாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த நாய்கள் அதிகரிப்பினால் கடும் அவதியை சந்தித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியின் முக்கிய வீதியான நத்தர்ஷா பள்ளி வாசல் அருகே 10 வயது சிறுமியை நாய் கடித்து குதறியது. .இதே போல காமராஜர் பகுதியில் வெறி நாய் கடித்ததில் 15க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இப்படி அடிக்கடி பொதுமக்களுக்கு தெருநாய்களினால் பிரச்சனை ஏற்படுவது குறித்து திருச்சி மாநகராட்சிக்கு பலமுறை பல்வேறு அமைப்பினர்களும் புகார் கொடுத்துக்கொண்டே வருகிறனர்.
ஆனால் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் ஸ்மார்சிட்டி திட்டத்தின் கீழ் பணி செய்கிறோம் என்று சொல்லி அலுவலகளில் யாரும் இருப்பதில்லை என்பது பரவலான குற்றசாட்டு இந்த நிலையில் எத்தனையோ முறை மனு கொடுத்தும் இது குறித்து அதிகாரிகள் தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நாய் வேஷம் அணிந்து திருச்சி மாநகராட்சியை முற்றுகையிட வந்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த திருச்சி கண்டோன்மென் போலிஸ் மனிதநேயமக்கள் கட்சியினர் உடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது தெருநாய்களையும். வெறிநாய்களை கட்டுப்படுத்த தவறிய திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இந்த தெருநாய், வெறி நாய்களின் பிரச்சனை குறித்து பேசிய கட்சியின் மாவட்ட தலைவர் ரபீக், இந்த தெருநாய், வெறிநாய் பிரச்சனையில் பொதுமக்களுக்கு தெருக்களில் செல்வதற்கு பெரிய பய உணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதை உடனடியாக பிடிக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை இதை நிறைவேற்ற தவறினால் அறிவிக்கப்படாத ஒரு நாளில் தீடீர் என 50க்கு மேற்பட்ட தெருநாய்களை பிடித்து மாநகராட்சி அலுவலகத்திற்குள் விடும் போராட்டம் நடத்திவிடுவோம் என்றார் கடுமையாக.