Skip to main content

பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயின் மகன் திடீர் மரணம்!

Published on 24/05/2020 | Edited on 24/05/2020
 legendary actress Vanisree son passed away

 

பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ அவர்களின் மகன் அபிநவ் வெங்கடேஷ் கார்த்திக் நேற்று உயிரிழந்தார்.

வசந்த மாளிகை, உயர்ந்த மனிதன், நிறைகுடம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ. இவருடைய மகன் அபிநவ் வெங்கடேஷ் கார்த்திக் பெங்களூர் மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். அபிநவ் வெங்கடேஷின் மனைவியும் மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சென்னை செங்கல்பட்டு அருகில் உள்ள வீட்டில் அவர் தங்கியிருந்த நிலையில் நெற்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது.  அங்கிருந்து  அபிநவ் வெங்கடேஷின் உடல் நடிகை வாணிஸ்ரீ வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.  அபிநவ் வெங்கடேஷுக்கு  குழந்தை பிறந்து சில வாரங்களே ஆன நிலையில் தற்போது அவருடைய திடீர் உயிரிழப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அபிநவ்  வெங்கடேஷ் சென்னையில் உள்ள அன்னபூர்ணா மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனையில்தான் மருத்துவம் படித்து முடித்துள்ளார் என்பதும், அதன் பிறகு பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்