Published on 17/12/2020 | Edited on 17/12/2020

ஆஸ்ரம் பள்ளி வளாகத்தைக் காலி செய்ய, ஏப்ரல் 30- ஆம் தேதி வரை அவகாசம் வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைச் சந்திக்க நேரிடும் என, லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள கல்விச் சங்கத்தை, சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ள நிலையில், லதா ரஜினிகாந்த் தரப்பில், தான் எந்தவிதமான நீதிமன்ற அவமதிப்பிலும் ஈடுபடவில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘ஆஸ்ரம் பள்ளி இடத்தை 2020- ல் காலி செய்ய வேண்டிய நிலையில், கரோனா தொற்றால் அது முடியவில்லை. அதனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டோம். நீதிபதியும் அவகாசம் வழங்கியுள்ளார். வாடகை மற்றும் டி.டி.எஸ். தொகையில் ஆஸ்ரமம் பள்ளிக்கு எந்த பாக்கியும் இல்லை.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.