Skip to main content

ரூ.1.50 கோடி சொத்தை அபகரிக்க ஓ.பி.எஸ். தம்பி ஓ.ராஜா முயற்சி! - தேனி எஸ்.பி.யிடம் புகார் 

Published on 22/07/2022 | Edited on 22/07/2022

 

Land fraud case on ops brother o raja

 

கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ள வில்பட்டியில் ரூ. 1.50 கோடி மதிப்பில் உள்ள சொத்தை, தேனி மாவட்ட ஆவின் தலைவர் ஓ.பி.எஸ் தம்பி ஓ.ராஜா அபகரித்து விற்பனை செய்ய முயற்சித்து மிரட்டல் விடுவதாக தேனி மாவட்ட எஸ்.பி பிரவீன் உமேஷ் டோங்க்ரேவிடம் நில உரிமையாளர் புகார்.  

 

அந்த புகாரில் கூறியிருப்பதாவது; ‘என் மனைவி சந்தானலெட்சுமி பெயரில் ஒரு ஏக்கர் 83 சென்ட் தோட்டம் வில்பட்டியில் உள்ளது. இந்த நிலத்தை எனது மகளின் திருமணத்திற்காக விற்க முடிவு செய்தோம். இதற்காக கடந்த 2010ல் பெரியகுளத்தில் ஓ.பிஎஸ். தம்பி ஓ.ராஜாவின் உறவினர் தென்கரையைச் சேர்ந்த கிருஷ்ணன் மூலம் தொடர்பு கொண்டார். சொத்தின் அப்போதைய மதிப்புத் தொகை ரூ.40 லட்சம் வழங்குவதாக கூறியதை நம்பி கிருஷ்ணன் பெயரில் 2010 ஆகஸ்ட் 19ல் பொது அதிகார பத்திரம் எழுதிக் கொடுத்தோம். 

 


அதன்பின் ஓ.ராஜாவும் கிரைய தொகை ரூ.40 லட்சத்தை மூன்று மாதங்களில் தருவதாக கூறினார்; ஆனால் தரவில்லை. இந்த நிலையில் கிருஷ்ணன் எங்கள் அனுமதியின்றி பொது அதிகார பத்திர உரிமையை பயன்படுத்தி சொத்தை வேறு ஒரு நபருக்கு விற்க முயற்சித்துள்ளதை தெரிந்து பவர் ஆப் அத்தாரிட்டி உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தினோம். 

 


பணத்தை தர மறுத்து ஓ.ராஜா மிரட்டினார். பின் அவருக்கு பயந்து 2011ல் அக்டோபரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் புகார் கொடுத்தோம். அப்படியிருந்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. இந்த நிலையில் கடந்த 2011 நவம்பர் 4ல் தென்கரை விஜயகுமாருக்கு சொத்தை விற்க முயன்றனர். விஜயகுமார் சொத்தின் உரிமையாளர் கையெழுத்தின்றி சொத்தை வாங்க மறுத்துள்ளார். இந்நிலையில ஓ.ராஜா, கிருஷ்ணன் ஆகியோர் என்னை மிரட்டி கையெழுத்திட நிர்பந்திக்கின்றனர். இதனால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளார். இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி.யும் விசாரணையை தொடங்கி இருக்கிறார்.

 

சார்ந்த செய்திகள்