Skip to main content

கோணாங்குப்பம் அய்யனார் ஆலய கும்பாபிஷேகம்; பெரும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Published on 06/05/2023 | Edited on 06/05/2023

 

 Kumbabhishekam at Konankuppam Ayyanar Temple near Virudhachalam

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கோணாங்குப்பம் ஸ்ரீ அய்யனார் ஆலய நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள கோணாங்குப்பம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபூரணி, ஸ்ரீபொற்கலை உடனுறை, முகையூர் ஸ்ரீ அய்யனார் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 3 ஆம் தேதி(நேற்று முன்தினம்) விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்வானது இரண்டு கால யாக பூஜை நடைபெற்று, மகாபூர்னாஹீதி அடைந்து, மங்கல வாத்தியத்துடன் இன்று கடம் புறப்பாடு நடைபெற்று, விருத்தாசலம் பழமலைநாதர் ஆலய சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, விமானக் கலசத்திற்கு புனித நீரூற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

 

பின்னர் ஸ்ரீவிநாயகர், சுப்ரமணியர், ஸ்ரீ பூரணி, ஸ்ரீபொற்கலை, சப்த கன்னிகைகள், ஸ்ரீ குதிரை, யானை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்வில் சிங்கப்பூர் தொழிலதிபர் சத்திராமு, ஜோதிமணி ராமு குடும்பத்தினர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக எற்பாடுகளை கோணாங்குப்பம் பூசாரி வகையறா அன்பர்கள் மற்றும் முகையூர் அய்யனார் குல தெய்வ குடும்பத்தார் சிறப்பாக செய்திருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்