Skip to main content

கண்டித்த கணவன் கொலை - நாடகமாடிய மனைவி காதலனுடன் கைது

Published on 06/10/2018 | Edited on 06/10/2018
The wife arrested with the boyfriend



வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை பெல் நரசிங்கபுரம் அருகே உள்ள சர்ச்தெரு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28). இவர் கடந்த 3ஆம் தேதி சிப்காட் மணியம்பட்டு அருகே ஏ.எஸ்.ஏ. நகர் பகுதியில் உள்ள தனியார் கிணற்றில் பிணமாக கிடந்தார். இதனை கேள்விப்பட்ட அவரது மனைவி ரம்யா (23) கதறி அழுதார். 
 

போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, அருண்குமார் மனைவி ரம்யாவிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அருண்குமார் கொலைக்கு அவரது மனைவி ரம்யாவும், அவரது கள்ளக்காதலனுமே காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து ரம்யாவின் காதலன் தாமஸ் ஆல்வா எடிசனை (வயது 27) பிடித்து விசாரணை நடத்தினர்.
 

போலீசாரிடம் தாமஸ் ஆல்வா எடிசன் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
 

நானும், அருண்குமாரின் மனைவி ரம்யாவும் உறவினர்கள். எனக்கு ரம்யா முறைப்பெண் ஆவார். நான் ரம்யாவை காதலித்தேன். அவரை திருமணம் செய்துக்கொள்வதாக கூறினேன். ஆனால் ரம்யா, அருண்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரம்யாவுக்கு திருமணம் ஆகியவுடன் எனது பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். எனக்கு ஒரு குழந்தை உள்ளது. 
 

எனக்கு திருமணம் ஆனாலும், ரம்யா மீது எனக்கு ஒரு கண் இருந்து வந்தது. இதனால் ரம்யாவை நெருக்கி நெருங்கி பழகினேன். இதில் எனக்கும் ரம்யாவிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. 
 

எனக்கு ரம்யா முறைப்பெண் என்பதால் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வருவேன். நானும் ரம்யாவும் செல்போனிலும் பேசி வந்தோம். இது அருண்குமாருக்கு தெரியவந்தது. இதனை கண்டுபிடித்த அருண்குமார் முதலில் ரம்யாவை கண்டித்தார். இருந்தாலும் நாங்கள் பழகி வந்தோம். இதையடுத்து அருண்குமார் என்னை கண்டித்தார். நானும் ரம்யாவும் சந்திக்க முடியாதபடி அவர் நடந்துகொண்டார். என்னால் ரம்யாவை சந்திக்க முடியாமல் இருக்க முடியவில்லை. ரம்யாவும் என்னை பார்க்க முடியாமல் தவித்தார்.
 

இதனால் ஆத்திரமடைந்த நான் அருண்குமாரை கொலை செய்ய திட்டமிட்டேன். எனக்கு துணையாக எனது நண்பர்கள் சிப்காட் தென்றல் நகர் பகுதியை சேர்ந்த சங்கீத்குமார் (26), வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்த சரத்குமார் (24), மாந்தாங்கல் பகுதியை சேர்ந்த ரஜினி (22) ஆகியோரை சேர்த்துக்கொண்டேன்.
 

கடந்த 2-ந் தேதி இரவு அருண்குமார் உணவு வாங்குவதற்காக புளியந்தாங்கல் அருகே உள்ள ஓட்டலுக்கு வந்திருந்தார். இதை எதிர்பார்த்து காத்திருந்த நாங்கள் 4 பேரும் சேர்ந்து அருண்குமாரை அடித்து உதைத்தோம். பின்னர் அவரை மணியம்பட்டு அருகே ஏ.எஸ்.ஏ.நகர் பகுதியில் உள்ள தனியார் கிணற்றில் தூக்கி வீசினோம். அப்போது அவருக்கு உயிர் இருந்தது. நாங்கள் தூக்கி வீசியதில் அவர் இறந்திருக்கலாம் என்று  அவர் கூறியுள்ளார்.
 

இதையடுத்து அருண்குமாரின் மனைவி ரம்யா, தாமஸ் ஆல்வா எடிசன், சங்கீத்குமார், சரத்குமார், ரஜினி ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
 

அருண்குமார் தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அருண்குமார் - ரம்யாவுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் இரண்டு வயது பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். 
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்