



Published on 10/03/2025 | Edited on 10/03/2025
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம், மாதவரம் தொகுதி மகளிர் அணி சார்பாக மாதவரம் முனுசாமி நகர் பொன்னியம்மன்மேடு பகுதியில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் நடைபெற்றது.
இதில் மாதவரம் தொகுதியைச் சார்ந்த தமிழக வெற்றிக் கழகத்தை சார்ந்த மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில உறுப்பினர் சேர்க்கை அணி, துணைச் செயலாளர் எம்.எல்.பிரபு மற்றும் மாதவரம் பகுதி தலைவர் மாதவரம் டி.விஜய் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டனர்.