கடலூர் மாவட்டம் சிதம்பரம் வடுகநாதன் தியேட்டர் மேலாளரை கொலைவெறியுடன் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட அமமுக குமராட்சி ஒன்றிய செயலாளர் மில்லர் குண்டர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செப் 27-ந்தேதி இரவு சிதம்பரம் வடுகநாதன் தியேட்டரில் மில்லர் வயது 50, பிரபு வழக்கறிஞர் என்பவர்களுடன் மேலும் 14 பேர்கள் சேர்ந்து சிதம்பரம் வடுகநாதன் தியேட்டரில் முன்விரோதம் காரணமாக தியேட்டர் மேனேஜர் மாரிஅலெக்சாண்டர் வயது-35 என்பவரை கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தி அவரிடம் இருந்த நகைகனை பறித்தும், தியேட்டரில் உள்ள பொருட்களை உடைத்து சேதப்படுத்தியும், கொலை மிரட்டல் விடுத்து சம்மந்தமாக சிதம்பரம் நகர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்து சிதம்பரம் துணைக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் முருகேசன் விசாரணை மேற்கொண்டனர்.
இவ்வழக்கில் முதன்மை குற்றவாளிகளாக மில்லர் வயது 50, முதல் குறுக்கு தெரு எஸ்.ஆர். நகர், சிதம்பரம், அரவிந்த்ராஜ் வயது 32, அப்பு (எ) சந்தோஷ்குமார் வயது-21, நிவேஷ் வயது 22, கிருபாகரன் வயது 21, நடராஜன் வயது 57, மதியழகன் வயது 21, பாலாஜி (எ) வெங்கடேசன் வயது 17, அருண் வயது 19, சிவா வயது 19 என 10 பேரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவான பிரபு வழக்கறிஞர், சூர்யா,கார்த்தி, சோழமணி, ராம்ஜி ஆகியோர்களை கைது செய்ய தனிப்படை மூலம் அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது.
மேலும் இவ்வழக்கில் மில்லர் என்பவர் மீது சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தில் 1 வழக்கும் நீதிமன்ற விசாரணையில் இருந்து வருவதால் இவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவு படி மில்லர் என்பருக்கு 16.10.19 அன்று முதல் ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.