Published on 14/01/2020 | Edited on 14/01/2020
43வது சென்னை புத்தகத் திருவிழா சென்னை, நந்தனம் பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த ஜனவரி 09ஆம் துவங்கி நடந்துகொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதிலுமிருந்து சுமார் 400 பதிப்பகங்கள் தங்களது விற்பனை அரங்குகளை இந்த கண்காட்சியில் அமைத்துள்ளனர். குறிப்பாக இந்த வருடம் தமிழக தொல்லியல்துறை சார்பில் கீழடி அகழ்வாய்வு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அரங்கில் கீழடி அகழ்வாய்வு குழியின் மாதிரி, உறை கிணறு மாதிரி, கீழடியில் உள்ள பண்டைய நீர் மேளாண்மை அமைப்பின் மாதிரி, பானை வளைதல் தொழிட்நுட்பத்தில் உருவானப் பொருட்கள், திமில் காளையின் எழும்புகள் உள்ளிட்ட பல தொல்லியல் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.