கடந்த 8- ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனை சாவடியில் இருந்த எஸ்.ஐ வில்சனை அப்துல்சமீம், தவ்பீக் இருவரும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனா். நாடு முமுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் கொலையாளிகளை கா்நாடக உடுப்பியில் வைத்து 14- ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.
அவா்களை 16- ஆம் தேதி அதிகாலையில் குமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனா். பின்னா் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவா்களை 20- ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கபட்டு 20-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத்தொடா்ந்து தீவிரவாதிகள் இரண்டு பேரையும் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
![kanyakumari district ssi wilson incident case changed the nia tamilnadu government order](http://image.nakkheeran.in/cdn/farfuture/je-20Z1lHTJzV8p-ynSpujilICrU0eFdOQBujeoX6Is/1579677202/sites/default/files/inline-images/sfdfdfdfdfz%20%281%29.jpg)
இந்த நிலையில் 20- ஆம் தேதி மீண்டும் நாகா்கோவில் முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீசார் அப்துல்சமீமையும், தவ்பீக்கையும் போலீஸ் கஸ்டடியில் 28 நாட்கள் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதனை தொடா்ந்து நீதிபதி அது சம்மந்தமாக 21-ம் தேதி மதியம் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார். இதை தொடா்ந்து மீண்டும் நேற்று (21.01.2020) இரண்டு பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாகா்கோவில் நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தினார்கள்.
இதைத்தொடா்ந்து போலீஸ் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி அப்துல் சமீம், தவ்பீக் இருவரையும் 28 நாட்களுக்கு பதில் 10 நாட்கள் மட்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடா்ந்து போலீசார் இருவரையும் பாதுகாப்புடன் அழைத்து சென்றனா். விசாரணைக்காக அவா்களை கேரளா, சென்னை, கா்நாடகா, பெங்களூா், டில்லி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று விசாரிக்க முடிவு எடுத்து இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறினார்கள்.
![kanyakumari district ssi wilson incident case changed the nia tamilnadu government order](http://image.nakkheeran.in/cdn/farfuture/Ji_pxSsN7Xe6bp5EKXI0t0RSR2KD7hqpSEGoU7FEIXU/1579677231/sites/default/files/inline-images/tn%20gvot_3.jpg)
இந்நிலையில் இந்த வழக்கை என்.ஐ.ஏ.க்கு மாற்றம் செய்த தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. அப்துல் சமீம், தவ்பீக் இருவர் மீதும் உபா சட்டம் போடப்பட்டதையடுத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனிடையே வில்சன் கொலை வழக்கில் கைதான பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு தந்ததாக 10 பேரை கைது செய்து கியூ பிரிவு போலீசார் விசாரித்து வந்த நிலையில், என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.