இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஓன்று ஆடி அமாவாசை. இந்த நாளில் நீா் நிலைகளில் முன்னோா்களை நினைத்து பலிகா்ம பூஜைகள் செய்து தா்ப்பணம் கொடுப்பாா்கள். இந்த ஆண்டு ஆடி அமாவாசை விழா இன்று இந்துக்கள் வீடுகளில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடல், ஆறு, குளம் மற்றும் வாய்காலில் புனித நீராடி முன்னோா்களுக்கு பலிகா்மம் நடத்தினாா்கள்.
![a](http://image.nakkheeran.in/cdn/farfuture/iiSMIAUKMOQ0cMPnRfLYDJfWuNfq-miFHwXGXQoEGD0/1564573567/sites/default/files/inline-images/aadi1_0.jpg)
இதில் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமாி கடலில் பலிகா்மம் நடத்த நேற்று நள்ளிரவு முதலே உள்ளூா் மற்றும் வெளியூா் பக்தா்கள் கன்னியாகுமாியில் குவிந்தனா். அதிகாலையில் கடற்கரையில் வாிசையில் உட்காா்ந்து இருந்த புரோகிதா்களின் முன்பு அமா்ந்து பக்தா்கள் முன்னோா்களை நினைத்து பலிகா்மம் பூஜை செய்து தா்ப்பணம் நிறைவேற்றினாா்கள்.
![k](http://image.nakkheeran.in/cdn/farfuture/QYW0VmyfF5_eKw0oVMBL3qE5799tMQ3NdYrQG9Ubz-g/1564573891/sites/default/files/inline-images/k5.jpg)
![a](http://image.nakkheeran.in/cdn/farfuture/vkIrohblXJe5kUgdilnQQvMNU_6d2yyRhLGvqTHgQkI/1564573611/sites/default/files/inline-images/aadi3_1.jpg)
இதனால் கன்னியாகுமாியில் பல்லாயிரகணக்கான மக்கள் குவிந்ததால் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் வெள்ளம் போல் காட்சியளித்தனா். இதையொட்டி பாதுகாப்புக்காக 200க்கும் மேற்பட்ட போலிசாா் குவிக்கப்பட்டனா். இதே போல் கடலில் நீராடும் பக்தா்களை பாதுகாக்கும் விதமாக கடலோர பாதுகாப்பு போலிசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
மேலும் கன்னியாகுமாி பகவதி அம்மன் கோவிலிலும் பக்தா்கள் குவிந்தால் நீண்ட வாிசையில் நின்று அம்மனை தாிசித்து சென்றனா். இதே போல் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீராடி பலி கா்மம் பூஜை செய்து தா்ப்பணம் நடத்தினாா்கள்.