தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாள் நேற்று (17.09.2021) கொண்டாடப்பட்டது. முன்னதாக தமிழ்நாடு முதல்வர், பெரியாரின் பிறந்தநாளான செப் 17ஆம் தேதி இனி சமூகநீதி தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி நேற்று அரசு அலுவலகங்களிலும், பல்வேறு இடங்களிலும் சமூகநீதி தின உறுதிமொழி ஏற்பும் நடந்தது.
அதேசமயம், அண்ணா பிறந்தநாள், திமுக துவங்கிய தினம், பெரியார் பிறந்தநாள் மூன்றையும் சிறப்பிக்கும் விதமாக திமுக ஒவ்வொரு ஆண்டும் செப். 15 முதல் 17ஆம் தேதிவரை முப்பெரும் விழாவைக் கொண்டாடும். இந்நிலையில், பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக மகளிரணி தலைவரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி, தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
திமுக மகளிரணி சார்பில் வெளியிடப்பட்ட அந்த வீடியோ, பெரியாரின் பிறந்தநாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்த செய்தியுடன் தொடங்கி, பெரியாரின் கொள்கைகளையும், நோக்கங்களையும், தமிழ்நாட்டிற்கு அவர் என்னவெல்லாம் செய்தார் என்பதையும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு எளிதாக புரிய வைக்கும் வகையில் அந்த வீடியோ செல்கிறது. இறுதியில், பெரியார் என்பது ஓர் உணர்வு என்று தெரிவித்து, அனைவருக்கும் சமூகநீதி நாள் வாழ்த்துகள் என்ற செய்தியுடன் முடிவடைகிறது.
#HBDThanthaiPeriyar #72YearsOfDMK #SocialJusticeDay#DravidamisaLifestyle#MupperumVizha2021 pic.twitter.com/0R43m9Rh7P
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 16, 2021