Skip to main content

மன்னார்குடியை புதிய மாவட்டமாக்க வேண்டும்; சேவை சங்கங்கள் அமைச்சர் காமராஜிடம் மனு

Published on 22/07/2019 | Edited on 22/07/2019

 

மன்னார்குடியை தலைமையாகக் கொண்ட புதிய மாவட்டம் உருவாக்க வலியுறுத்தி சேவை சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் தமிழக உணவுத்துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தியுள்ளனர். ஏற்கனவே, புதிய மாவட்ட கோரிக்கை விவகாரத்தில் மயிலாடுதுறையிலும், கும்பகோணத்திலும் போராட்டம் ஆர்பாட்டங்கள் என அதிரடி காட்டிவர, மன்னார்குடியுமா என அரசியல் வட்டாரமே முனுமுனுக்கிறது.

 

k

 

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியை தலைமையாகக் கொண்ட புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மன்னார்குடியில் செயல்படும் வர்த்தக சங்கம் மற்றும் சேவை சங்கங்கள் உள்ளிட்ட பொதுநல அமைப்புகளின் ஒருங்கிணைப்பாக செயல்படும் நேசக்கரம் அமைப்பு சார்பில் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் மன்னார்குடி ரங்கநாதன், வர்த்தக சங்கத் தலைவர்  பாரதி ஜீவா, ஆகியோர் தலைமையில் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜை அவரது இல்லத்தில் சந்தித்து, இது குறித்து கோரிக்கை மனு அளித்தனர்.

 

தமிழக முதல்வருக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ள விவரத்தை கூறிய பொதுநல அமைப்பினர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய புதிய மாவட்டத்தை உருவாக்கி அதற்கு மன்னார்குடியை தலைமையாக அறிவிக்க வேண்டும், இந்தக் கோரிக்கை நிறைவேறும் வரை, தற்போது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி வட்டத்தை பிரித்து, புதிதாக உருவாக்கப்பட உள்ள, வேறு புதிய மாவட்டங்களில் இணைக்கக் கூடாது என அமைச்சரிடம் வலியுறுத்தினர். சேவை சங்கங்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் எனவும் தமிழக முதல்வரின் கவனத்துக்கு இதனைக்கொண்டு செல்வதாகவும்  மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.


இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் மன்னார்குடியில் செயல்படும் 20க்கும் மேற்பட்ட சங்கங்களின் நிர்வாகிகள் 36 பேர் பங்கேற்றனர்.

 

இது குறித்து விசாரித்தோம், " மன்னார்குடி புதிய மாவட்டம் என்பது நீண்டநாள் கோரிக்கைகளில் ஒன்றுதான், அது தற்போது இயலாத ஒன்றானதைபோல திருவாரூரை மாவட்டமாக்கப்பட்டுவிட்டது. மன்னார்குடியை திருவாரூர் மாவட்டத்தில் இருந்து பிரித்து புதிதாக அறிவிக்கவுள்ள கும்பகோணம் மாவட்டத்தோடு இனைக்கப்படலாம் என்கிற செய்தி பரவலாக அரசியல், அரசு அதிகாரிகள் வட்டாரத்திலும் பேசப்பட்டுவருகிறது, இதை தடுக்கவே புதிய மாவட்டம் என்கிற அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தால் திமுகவில் இருக்கும் இரு கோஷ்டிகளால் நிச்சயம் மன்னார்குடியை புதிய மாவட்டமாக மாற்ற முயற்சி நடக்கும் ". என்கிறார்கள்.

சார்ந்த செய்திகள்