Published on 16/01/2019 | Edited on 16/01/2019
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த கவிஞர் வைரமுத்து கிராமங்களில் முதியவர்கள் குறைய காரணம் மதுதான் என கூறினார்.
தமிழக அரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதையில் மயங்கிக் கிடக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பிய வைரமுத்து, கிராமங்களில் அதிகமாக இருந்த முதியவர்களின் எண்ணிக்கை குறைய மதுதான் காரணம். இப்போது இருக்கின்ற அரசும் சரி, இதற்கு பின் வரப்போகின்ற அரசும் சரி மதுவை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கை முடிவை எடுத்தால் தமிழர்கள் கொண்டாடுவர் எனக்கூறினார்.
மேலும் 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது தமிழ்நாட்டில் வகுக்கப்பட்ட சமூக நீதிக்கு எதிரானது எனவும் கூறினார்.