புதுக்கோட்டையில் அனிதாவுக்கு கமல் ரசிகர்கள் அஞ்சலி
மருத்துவர் கனவோடு இரவு பகலாக படித்த மாணவி அனிதாவின் கனவில் மண்ணை அள்ளிப் போட்டது மத்திய மாநில அரசுகள். இதனால் நீதிமன்றங்களை நாடியும் தனது கனவு பலிக்கவில்லை என்பதால் ஏமாற்றமடைந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டு புரட்சி விதை போட்டார். அன்று தொடங்கிய போராட்டம் நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது.
இந்த நிலையில் கனவோடு கரைந்துபோன அனிதாவுக்கு ஊருக்கு ஊர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் பதாகை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள் இளைஞர்கள். இன்று புதுக்கோட்டை நகரில் கமல் ரசிகர்கள் டாக்டர் அனிதாவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
இரா.பகத்சிங்