இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார். அதன்படி, பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் லட்சுமணனுக்கு அப்துல்கலாம் விருது வழங்கப்பட்டது. உயிரிழந்த மதுரை மருத்துவர் சண்முகபிரியாவுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. சண்முகப்பிரியாவின் வீரமான, துணிவான, தன்னலமற்ற மருத்துவ சேவையை பாராட்டி அவருக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. இவ்விருதினை சண்முகப்பிரியாவின் கணவர் சண்முக பெருமாள் பெற்றுக்கொண்டார். மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்த நபர்கள், நிறுவனங்களுக்கு மாநில விருதுகள் வழங்கப்பட்டது. திருச்சி ஹோலி கிராஸ் சர்வீஸ் சொசைட்டி தொண்டு நிறுவனத்திற்கு விருது வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்ததற்காக சிறந்த மருத்துவர் விருது சென்னை சேர்ந்த பத்மபிரியாவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த சமூக பணியாளர் விருது நெல்லையை சேர்ந்த மரிய அலாசியஸ் நவமணிக்கு வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு விருது 10 கிராம் தங்கம் மற்றும் சான்று அளிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்காக அரும்பணி ஆற்றிய ஆட்சியர்கள் இரண்டு பேருக்கும் மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் விருது தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா சிவகங்கை ஆட்சியர் மதுசூதன் ரெட்டி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதில், ஆண்கள் பிரிவில் மூன்று பேருக்கும், பெண்கள் பிரிவில் மூன்று பேருக்கும் தரப்பட்டது. சென்னை-அரவிந்த் ஜெயபால், திருவாரூர்-பசுருதின், நீலகிரியை சேர்ந்த ரஞ்சித்குமாருக்கு மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டது. அதேபோல் திண்டுக்கல்-மகேஸ்வரி, கடலூர்-அமலா ஜெனிபர் ஜெயராணி, சென்னை-மீனா ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. சமூக நலனுக்கு சிறந்த சேவைக்காக பணியாற்றிய மருத்துவர் சாந்தி துரைசாமி அவ்வையார் விருது வழங்கப்பட்டது. சிறந்த மூன்றாம் பாலின விருதை திருநங்கை கிரேஸ் பானுவுக்கு மு.க.ஸ்டாலின் வழங்கினார். சுதந்திர தின விழாவில் 3 பேருக்கு முதலமைச்சரின் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது. கிண்டி அரசு மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் நாராயணசாமிக்கு முதல்வர் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது.