Skip to main content

'போலி டுவிட்டர் கணக்கு' பாஜகவை சாடிய ஜோதிமணி எம்.பி!

Published on 22/08/2019 | Edited on 26/08/2019

ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக கூறி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை நேற்று சிபிஐ கைது செய்தது. கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்தை இன்று மாலை ரேஸ்கோர்ஸ் அவன்யூ நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தவுள்ளனர். இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் பிரசாந்த் தன்னுடைய டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் "தெய்வம் நின்று கொல்லும். ஈழத் தமிழர் கதறிய போது இங்கே அதிகார போதையில் அகங்காரமாய் சுற்றிய அத்தனை பேரையும் தெய்வம் நிச்சயம் நின்று கொல்லும்" என்று தெரிவித்துள்ளார். 
 

 

அவரது கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பெயரில் உள்ள ஒரு டுவிட்டர் கணக்கில் இருந்து பதில் கருத்து பதிவிடப்பட்டுள்ளது. அந்த பதிவில் 'போடா மூட்டாள்' என்று தெரிவித்துள்ளார். இதை காங்கிரஸ் எம்.பி ஜோதிமணிதான் தெரிவித்துள்ளார் என்று இணையத்தில் வாத பிரதிவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், இதுதொடர்பாக ஜோதிமணி தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். அதில், சங்கப்பரிவாரங்களின் பெய்டு ட்ரோல்ஸ் சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எனது Id க்களை போர்ஜரி செய்யும் பணியைத் துவங்கியிருக்கிறார்கள். பிஜேபியிடம் நிறைய பணம் இருக்கலாம் அதற்காக தமிழ் ஒழுங்காக எழுதக்கூடத் தெரியாதவர்களை பணிக்கு அமர்த்தவேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்! என்று தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்