இந்தியாவில் தமிழகம் மற்றும் ஒடிஷா உள்ளிட்ட இரு மாநிலங்களில் அஞ்சல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை வெளியீட்டுள்ளது இந்திய அஞ்சல் துறை. இதற்கான கல்வி தகுதி பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் அடிப்படை கல்வியறிவு , கனிணி தொடர்பான கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும். மேலும் கிளை போஸ்ட் மாஸ்டர் , உதவிக்கிளை போஸ்ட் மாஸ்டர் , தபால் டெலிவரி செய்பவர்கள் உட்பட 4442 காலி பணியிடங்கள் தமிழகத்தில் உள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்தது.
இந்த காலி பணியிங்களுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுவதாக இந்திய அஞ்சல் துறை தனது அறிவிப்பாணையில் தெரிவித்துள்ளது. இதற்கான இணையதள முகவரி : http://www.appost.in/gdsonline/Home.aspx. விண்ணப்பத்தாரர்களின் வயது 20 முதல் 40க்குள் இருக்க வேண்டும். குறைந்த பட்ச சம்பளமாக ரூபாய் 10000 ஆயிரம் முதல் 20000 வரை கிடைக்கும். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகம் மற்றும் ஒடிஷா மாநிலத்திற்கு மட்டுமே தனியாக காலிபணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியீட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் படி ஒடிஷா மாநிலத்தில் அஞ்சல் துறையின் காலி பணியிடங்கள் 4392 உள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் ரூபாய் 100 ஆகும்.
இந்த கட்டணத்தை இணையதளம் மூலமாகவும் , அஞ்சல் துறை மூலமாகவும் செலுத்தலாம் என தெரிவித்துள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு http://www.appost.in/gdsonline/Home.aspx இணையதளத்திற்கு சென்று அறியலாம். இணையதள விண்ணப்பங்கள் தொடங்கும் நாள்: 15-03-2019 , கடைசி நாள் : 15-04-2019. எனவே இந்த வாய்ப்பை தமிழக இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பி.சந்தோஷ் , சேலம் .