Skip to main content

90 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்... -ஜெயக்குமார்

Published on 30/01/2019 | Edited on 30/01/2019

 

jaya kumar

 

சென்னை காமராஜர் சாலையில் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,


உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று முதலமைச்சர் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வேண்டுகோளை ஏற்று பணிக்கு திரும்புவர்தான் அவர்கள் செய்யக்கூடிய சமுதாயக்கடமை. ஏறக்குறைய 90 சதவீதம் பேர் பணிக்கு திரும்பிவிட்ட நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் 100 சதவீதம் பேரும் பணிக்கு திரும்புவார்கள். அரசு யாருக்கும் நெருக்கடி கொடுப்பது கிடையாது. அரசு அனைவரையும் வேண்டும் என்ற நிலையில்தான் உள்ளது. அரசு ஊழியர்களையும் சரி, ஆசிரியர்களையும் சரி அரசு மதிக்கிறது.


அரசின் நிதிநெருக்கடி போன்ற பல்வேறு சூழ்நிலைகளையெல்லாம் தெரிவித்துவிட்ட பிறகு, உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ள நிலையில், அதேபோன்று முதலமைச்சரும் வேண்டுகோள் விடுத்துள்ளார். நிதி நெருக்கடிக்கு இடையிலும் சுமார் 14,000 கோடி ரூபாய்க்கு சலுகைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களுக்கு சலுகைகள் அளிப்பதில் தாராள மனதுடன் அரசு இருக்கிறது. அரசு ஊழியர்கள் சமுதாயப் பணிகளில் ஈடுபட வேண்டும். கோரிக்கைகளை எழுப்புவதற்கு இது சரியான தருணமல்ல என்பதால்தான் அரசால் இதை ஏற்க முடியவில்லை. 

 

 

சார்ந்த செய்திகள்