இந்திய தடகள சங்கத்தின் சார்பில் 17வது தேசிய இளையோர் கோப்பைக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம், தமிழ்நாடு மாநில தடகள சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து செப்டம்பர் 24ந்தேதி தொடங்கி செப்டம்பர் 26ந்தேதி வரையென 3 நாட்கள் திருவண்ணாமலையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தொடங்கிவைத்தார். இந்தியா முழுவதிலும்மிருந்து வந்துயிருந்த 1000 விளையாட்டு வீரர்கள் ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல் போன்ற 46 பிரிவு விளையாட்டுகளில் ஈடுப்பட்டனர். அந்த நிகழ்வின் இறுதிநாளான செப்டம்பர் 26ந்தேதி மாலை 6 மணியளவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆண்கள் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் கோப்பை ஹரியானா மாநில அணிக்கும், பெண்கள் பிரிவில் தமிழக அணிக்கும், ஓட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பை தமிழக அணி பெற்றது. அவர்களுக்கான கோப்பையை திருச்சி மாநகர துணை ஆணையர் ஐ.பி.எஸ் அதிகாரி மயில்வாகனம் வழங்கினார்.
இங்கு நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் முறையாக பண பரிசு வழங்கப்படும் என அறிவித்துயிருந்தது மாவட்ட தடகள சங்கம். நிகழ்ச்சியில் கோப்பைகள் மட்டும் வழங்கினார்களே தவிர பண பரிசு வழங்கவில்லை என்பது விளையாட்டு வீரர்களையும், ஆர்வலர்களையும் வேதனைப்படவைத்தது என கடந்த செப்டம்பர் 26ந்தேதி நமது நக்கீரன் இணையத்தில் வெளியிடப்பட்ட பந்தாவாக தொடங்கி பிசுபிசுப்போடு முடிந்த தேசிய விளையாட்டு போட்டி. –ஏமாந்த வெற்றியாளர்கள் என்கிற தலைப்பில் செய்தி வெளியிட்டுயிருந்தோம்.
இந்நிலையில் செய்தியை படித்துவிட்டு நம்மை தொடர்பு கொண்ட மாவட்ட தடகள சங்கத்தை சேர்ந்தவர்கள், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பணப்பரிசும் தரப்பட்டது. 46 பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் முதல் இடம் பிடித்த வீரருக்கு ஆயிரம் ரூபாய், இரண்டாம்மிடம் பிடித்தவருக்கு 750 ரூபாய், மூன்றாம்மிடம் பிடித்தவருக்கு 500 ரூபாய் என 46 பிரிவுகளில் முதல் 3 இடங்களை பிடித்த வீரர்களுக்கு மட்டும் 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டது. அனைவருக்கும் பதுக்கமும், பணப்பரிசும் மேடையில் தருவதற்கான வாய்ப்பு மற்றும் நேரம் சரியாக அமையவில்லை. ஒவ்வொரு போட்டி நடந்து முடிந்து வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டதும், அவர்களுக்கான பணப்பரிசும், பதக்கமும் அங்கேயே தரப்பட்டது. அங்கு பெற முடியாதவர்களுக்கு அவர்கள் தங்கியிருந்த அறையில் வைத்து வழங்கப்பட்டது என்கிறார்கள்.