Skip to main content

ஜகபர் அலி கொலை வழக்கு; மூன்று பேருக்கு குண்டாஸ்

Published on 23/02/2025 | Edited on 23/02/2025
Jagbar Ali case; Three people arrested

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும், சமூக ஆர்வலருமான ஜகபர் அலி கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடியதால் கடந்த மாதம் 17 ந் தேதி கனிம கொள்ளையர்களால் மினி லாரியை 2 முறை மோதி படுகொலை செய்தனர். இந்த கொலை தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த வழக்கில் ஆர்.ஆர் கிரஷர் உரிமையாளர்கள் ராமையா, ராசு, ராசு மகன் தினேஷ்குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம், லாரி ஓட்டுநர் காசிநாதன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை அடுத்து திருமயம் காவல் ஆய்வாளர் குணசேகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார், வட்டாட்சியர் புவியரசன் பணியிட மாறுதல் செய்யப்பட்டார். கனிமவளத்துறை ஏ.டி லலிதா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த வழக்கில் கைதானவர்கள் தரப்பில் இரண்டு முறை நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் கிரஷர் உரிமையாளர்கள் ராமையா, ராசு, லாரி உரிமையாளர் முருகானந்தம் ஆகிய மூன்று பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதன் பேரில் சிபிசிஐடி போலீஸ் குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்கள். ஐந்து பேரும் புதுக்கோட்டை மாவட்ட சிறையில் இருந்த நிலையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்