Published on 10/12/2018 | Edited on 10/12/2018
![Jacko-Geo Strike Adjournment !!](http://image.nakkheeran.in/cdn/farfuture/U9nMRjW9MQ6xv-vvAzCUEtHbg1CduwMT11tHhJhVp2Y/1544470080/sites/default/files/inline-images/ASDS.jpg)
ஏழு அம்ச கோரிக்கைகளை முன் வைத்து ஜக்டோ -ஜியோ அமைப்பினர் போராட்டம் அறிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மதுரையில் கூட்டாக அளித்த பேட்டியில்.
ஜாக்டோ-ஜியோ சார்பில் நான்காம் தேதிவரை போராட்டம் அறிவித்திருந்தோம். ஆனால் 3 ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் கொடுத்த அறிவுறுத்தலின் பெயரில் இன்று வரை ஒத்திவைத்திருந்தோம். இந்நிலையில் மேலும் வரும் ஜனவரி 7-ஆம் தேதிவரை போராட்டத்தை ஒத்திவைக்கிறோம் என கூட்டாக பேட்டியளித்தனர்.