Skip to main content

உருவானது சாகர் புயல் மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Published on 18/05/2018 | Edited on 18/05/2018

ஏடன் வளைகுடா பகுதியில் சாகர் என்ற புயல் உருவாகியுள்ளதால் மீனவர்கள் தென்மேற்கு அரபிக்கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

FISHER

 

 

இன்று செய்தியாளர்களை சந்தித்த  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில்,

ஏடன் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறியுள்ளது. இந்தியாவால் சாகர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது கிழக்கு திசையில் ஏமன் நோக்கி  நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மீனவர்கள் தென்மேற்கு அரபிக்கடல் ஒட்டிய பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் எனவும் மேலும் இந்த சாகர் புயலினால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் இருக்காது எனவும் கூறினார். 

சார்ந்த செய்திகள்