சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில்,
நாளை மதியம் 2 மணி 43 நிமிடத்தில் சந்திரயான் மிஷன் 2 விண்ணில் ஏவப்பட உள்ளது. அதற்கான முயற்சிகள் எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டு இருக்கிறது. தொழில்நுட்பக் கோளாறுகள் எல்லாம் நல்லபடியாக சரி செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. ஒத்திகையும் பார்க்கப்பட்டு விட்டது.
இன்று மாலை 6.43 மணிக்கு கவுண்டன் தொடங்குகிறது. சரியாக நாளை மதியம் 2.43 மணி அளவில் சரியாக சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படும். இதுவரை தற்போது எல்லா விஷயங்களும் நல்லதாக நடந்து கொண்டிருக்கிறது. இதனால் நல்லபடியாக சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நாளை விண்ணில் ஏவப்பபடவுள்ள சந்திரயான் 2, 45 நாட்களில் 15 முறை சுற்றுப்பாதை விரிவாக்கத்தை எதிர்கொள்ளும் இறுதியாக நிலவின் தென் துருவத்தின் அருகே சந்திரயான் 2 தரையிறங்கும். இந்தியா மட்டுமல்லாது சந்திரயான்-2 ஏவப்படுவதை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்றார்.