Published on 26/02/2019 | Edited on 26/02/2019
சிதம்பரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது:
மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமலஹாசன் ஏற்கெனவே உள்ள நட்பின் அடிப்படையில் டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்தை சந்தித்துள்ளார்.

அப்போது தமிழக தேர்தல் குறித்து கமல் பேசியுள்ளார். அதற்கு பிரகாஷ்காரத், இந்தியாவில் பாஜகவை வீழ்த்த ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவான அணியை அமைத்து வருகிறோம். தமிழகத்தில் திமுகவுடன் தொகுதி உடன்பாடு செய்வது என்று ஏற்கெனவே முடிவெடுத்து விட்டோம். இதற்கான ஒப்புதலை டிசம்பர் மாதமே தமிழகத்திற்கு கொடுத்துவிட்டோம். இப்போது தொகுதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனவே தேர்தல் குறித்து விவாதிப்பதற்கு வாய்ப்பில்லை. தொடர்ந்து நண்பர்களாக இருப்போம் என்று கூறியிருக்கிறார்.