ஜெ. இல்லம் நினைவிடமாக மாற்றும் பணிகள் தொடக்கம்
ஜெயலலிதா வசித்து வந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் அரசு நினைவிடமாக மாற்றப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த நிலையில் இன்று அந்த இல்லத்தில் அளவிடும் பணிகளை அரசு அதிகாரிகள் துவங்கியுள்ளனர்.
ஜெ. மறைவுக்குப் பின்னர் அவரது இல்லத்தில் சசிகலா வசித்து வந்தார். இந்த இல்லத்தை ஜெயலலிதாவுக்கு உதவியாளராக இருந்த பூங்குன்றன் பராமரித்து வந்தார்.
முதல்வர் அறிவிப்புக்கு, ஜெ.வின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் எதிர்ப்பு தெரிவத்து வந்த நிலையில் அறிவிப்பு வெளியான இரண்டு நாளில் நினைவிடத்திற்கான பணிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.