விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் பத்துக்கும் மேற்பட்ட உயர்தர சைவ அசைவ உணவகங்கள் அமைந்துள்ளது. இந்த ஹோட்டல்களின் பின்புறம் டெங்கு கொசுப் புழுக்கள் உருவாக ஏதுவான சூழ்நிலை நிலவி வருவதாக புகார்கள் எழுந்தது. இதனால் இங்கு வசிக்கும் மக்களுக்கு பல இன்னல்கள் ஏற்படுவதாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் சுகாதார ஆய்வாளர் காந்த சீலன் மற்றும் செங்குறிச்சி ஊராட்சி செயலர் காமராஜ் தலைமையிலான அதிகாரிகள் புகார்கள் எழுந்துள்ள உணவு விடுதிகளை சுற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது டெங்கு கொசு உருவாக காரணமாக உள்ள கொசு புழுக்கள் அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பல ஹோட்டல்களில் இருந்து அவை அழிக்கப்பட்டது. மேலும் கொசுக்கள் வராதவாறு அவ்வப்போது சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுமாறு உணவு விடுதிகளுக்கு அறிவுறுத்தி சென்றனர் அதிகாரிகள்.