சென்னையில் கட்டடங்களுக்கான உட்கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணம் சதுர மீட்டருக்கு 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கும் மக்கள் கட்டண உயர்வை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு, தனிவீடுகள், வணிக ரீதியான கட்டடங்கள் அனைத்திற்கும் சி.எம்.டி.ஏ. தான் அனுமதி வழங்குகிறது. இதில், அடுக்குமாடி கட்டடங்களில் எத்தனை தளங்கள் அனுமதி வழங்குவதற்கு உட்கட்டமைப்பு கட்டணம் தனியாக வசூலிக்கப்படுகிறது. 2021- ஆம் ஆண்டு சதுர மீட்டருக்கு 198 ரூபாயாக வசூலிக்கப்பட்ட உட்கட்டமைப்பு கட்டணத்தை தற்போது 218 ரூபாயாக உயர்த்தி, பெருநகர வளர்ச்சிக் குழுமம் அறிவித்துள்ளது.
இந்த நடைமுறை வரும் ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வர இருப்பதாகவும், அதிகாரிகள் கூறுகின்றன. அரசின் இந்த அறிவிப்பால், 1,000 சதுர மீட்டர் அடுக்குமாடி குடியிருப்பு வாங்குவோர் கூடுதலாக 20,000 ரூபாய் கட்ட நேரிடும் என கட்டுமான நிறுவனங்கள் கூறுகின்றன.
பொதுகட்டட விதிகளின்படி, அதிக உயரமான கட்டடம் மற்றும் உயரம் குறைவாகக் கட்டப்படும் கட்டுமானங்களை வகைப்படுத்த, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் கூறுகின்றன.