தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 1,587 லிருந்து அதிகரித்து 1,596 ஆகப் பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விடச் சற்று அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாகக் குறைந்து வந்த ஒருநாள் தொற்று இரண்டாம் நாளாக இன்றும் அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,59,684 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 186 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 176 என்று இருந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று கோவையில் 224 ஆக இருந்த பாதிப்பு இன்று 232 ஆக அதிகரித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 35,094 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 18 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16,221 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 1,534 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25,77,646 பேர் மொத்தமாகக் குணமடைந்துள்ளனர். இணை நோய்கள் ஏதும் இல்லாத 7 பேர் உயிரிழந்துள்ளனர். கோவை-224, ஈரோடு-130, செங்கல்பட்டு-108, திருவள்ளூர்-49, தஞ்சை-92, நாமக்கல்-61, சேலம்-58, திருச்சி-49, திருப்பூர்-87 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.