புதிய கல்விக்கொள்கை தொடர்பான அறிவிப்புகளை வரவேற்று நடிகர் கமல்ஹாசன் ட்விட் செய்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையில், நாட்டின் GDP-இல் 6% கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது.
அதே போல் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையையும் தயார்படுத்த வேண்டும். மருத்துவத்துறை வழக்கமான 1 சதவிகிதத்தில் இருந்து உயர்ந்து 7-8% பங்கினை பெறுவது தேசத்தின் நலனுக்கு இன்றியமையாதது.
— Kamal Haasan (@ikamalhaasan) July 30, 2020
இந்தியாவில் புதிய கல்விக்கொள்கை தொடர்பான அறிவிப்புகளை நேற்று மத்திய அரசு அறிவித்தது. பல்வேறு அறிவிக்களை கொண்டதாகவும், கல்வி முறையில் பெரிய மாறுதல்களை உள்ளடக்கியதாகவும் அது இருந்தது. இந்நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில், நடிகர் கமல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், புதிய கல்விக் கொள்கையில், நாட்டின் ஜிடிபியில் 6% கல்விக்கு ஒதுக்கப்படுவது வரவேற்கத்தக்கது என்றும், கல்வியைப் போல் மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையையும் தயார்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.