Published on 20/12/2019 | Edited on 20/12/2019
அரியலூர் ரயில் நிலையம் அமைக்கப்பட்டு சுமார் 90 ஆண்டுகள் ஆகின்றன. இதன் வழியாக வைகை, பல்லவன், ராக்போர்ட், மங்களூர் , குருவாயூர், உட்பட பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்களும், பல பேசஞ்சர் ரயில்களும் செல்கின்றன. இங்கிருந்து பல்லாயிரக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர்.
இந்நிலைியில் அரியலூர் ரயில் நிலையம் அருகே 100 மீட்டர் தொலைவில் செல்லும், 100 அடி அகலம் உள்ள தஞ்சாவூர் - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு அகலமான புதிய சாலை அமைத்து நேரடியாக தேசிய நெடுஞ்சாலையுடன் அரியலூர் ரயில் நிலையத்தை இணைத்து போக்குவரத்தை மேம்படுத்த வேண்டுமென்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரியலூருக்கு வரும் ரயில் பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.